UPI ஐடி (VPA)க்கு பணம் அனுப்புவது எப்படி?
PhonePe-வில் நண்பரின் UPI ID-க்குப் பணம் அனுப்ப:
- செயலியின் முகப்புத் திரையில் உள்ள பணப் பரிமாற்றங்கள் பிரிவில் தொடர்பிற்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- தேடல் பட்டியின் கீழுள்ள UPI ID என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தொடர்புகளில் ஒருவரின் UPI ID-ஐத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஐடியை உள்ளிட்ட பின் சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தொகையை உள்ளிடவும்.
- அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் அனுப்பும் பணம், பணம் பெறுபவரின் UPI ID உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
முக்கியமானது: பணத்தை அனுப்பும் போது, நீங்கள் தொகையை செலுத்த விரும்பும் வங்கிக் கணக்கை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும், உங்கள் UPI ஐடி அல்ல.
குறிப்பு: சில நேரங்களில், உள் தொழில்நுட்ப பிழை காரணமாக, நீங்கள் உள்ளிட்ட UPI ஐடி சரியானதாக இருந்தாலும் சரிபார்க்கப்படாமல் போகலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சற்று நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்.
UPI ஐடிகளில் ஒன்றுக்கு பணம் அனுப்பப்பட்டால் பெற்றுக்கொள்வது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்