PhonePe-வில் வங்கிக் கணக்கைச் சேர்ப்பது எப்படி?
UPI பேமண்ட்டுகளைச் செய்வதற்கும் பிறரிடமிருந்து பணம் பெறுவதற்கும் உங்களிடம் ஏற்கனவே உள்ள வங்கிக் கணக்கை PhonePe-வில் சேர்க்கலாம். அதற்கு: :
- நீங்கள் PhonePe-வில் பயன்படுத்தும் மொபைல் எண்ணும் உங்கள் வங்கிக் கணக்குடன் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணும் ஒரே எண்ணாக இருக்க வேண்டும்.
- நீங்கள் சேர்க்க விரும்பும் வங்கிக் கணக்கிற்கு மொபைல் பேங்கிங் சேவைகளை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். மொபைல் பேங்கிங் சேவைகளை ஆக்டிவேட் செய்ய, உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
- சரிபார்ப்பு SMS ஒன்றை அனுப்ப உங்கள் மொபைல் எண்ணில் போதுமான பேலன்ஸ் இருக்க வேண்டும். உங்கள் தொடர்புகளில் உள்ள ஒருவருக்கு SMS ஒன்றை அனுப்பி, உங்களிடம் பேலன்ஸ் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
- உங்களிடம் வலுவான இன்டர்நெட் இணைப்பும் மொபைல் நெட்வொர்க்கும் இருக்க வேண்டும்.
PhonePe-வில் வங்கிக் கணக்கைச் சேர்க்க:
- PhonePe ஆப் முகப்புத் திரையில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்
- Payment Methods/பேமண்ட் முறைகள் பிரிவின் கீழ் Bank Accounts/வங்கிக் கணக்குகளைத் தட்டி Add New Bank Account/புதிய வங்கிக் கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
- பட்டியலிலிருந்து உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேடல் பட்டியில் வங்கியின் பெயரை உள்ளிட்டு உங்கள் வங்கியைத் தேடவும்.
குறிப்பு: பட்டியலில் உங்கள் வங்கி இடம்பெறவில்லை என்றால்,உங்கள் வங்கிக் கணக்கை PhonePe இல் சேர்க்க முடியாது. உங்கள் வங்கி பட்டியலிடப்படாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி மேலும் அறிக. - சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, நீங்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து SMS ஒன்று அனுப்பப்படும். கேட்கப்படும்போது, SMS அனுமதிகளை வழங்கவும்.
குறிப்பு: உங்கள் PhonePe கணக்குடன் பதிவுசெய்துள்ள அதே மொபைல் எண்ணை உங்கள் வங்கிக் கணக்குடனும் பதிவுசெய்திருந்தால், UPI தளம் தானாகவே உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெறும். - பிற செயலியில் அந்த வங்கிக் கணக்கிற்கு UPI PIN-ஐ அமைக்கவில்லை என்றால், UPI PIN-ஐ அமை என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கனவே UPI PIN-ஐ அமைத்திருந்தால், இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
SMS சரிபார்ப்பு தோல்வியடைந்தால் என்ன செய்யலாம் மற்றும் உங்கள் வங்கியில் மொபைல் எண்ணை எப்படி மாற்றலாம் என்பது குறித்து மேலும் அறியவும்.