UPI ஐடிகளை எதற்காகப் பயன்படுத்தலாம்?
PhonePe UPI ஐடியை இவற்றுக்காகப் பயன்படுத்தலாம்:
- தொடர்புகளில் ஒருவரிடம் UPI ஐடியைப் பகிர்வதன் மூலம் பணத்தைப் பெறலாம்.
- உங்கள் UPI ஐடிக்கு பேமண்ட் கோரிக்கை அனுப்பிய தொடர்பிற்கு பணம் அனுப்பலாம்.
- UPI பேமண்ட் முறையைத் தேர்வுசெய்து வணிகர்களுக்கு பேமண்ட் செய்யலாம். PhonePe UPI ஐடியை உள்ளிட்டால் SMS மூலமும் PhonePe செயலியிலும் ஒரு பேமண்ட் கோரிக்கையைப் பெறுவீர்கள், அதைக் கொண்டு நீங்கள் பேமண்ட் செய்யலாம்.
உங்களின் எந்தவொரு தொடர்பின் UPI ஐடியையும் வைத்து இவற்றைச்செய்யலாம்:
- மொபைல் எண்ணுக்கு பதிலாக அவர்களுடைய UPI ஐடியின் மூலம் பணம் அனுப்பலாம். PhonePe செயலியின் முகப்புத்திரையில் உள்ள Transfer Money/பணப் பரிமாற்றம் பகுதியில் இதைச் செய்யலாம்.
குறிப்பு: UPI மூலமாக பேமண்ட் செய்யும்போது UPI ஐடியைத் தேர்வுசெய்யாமல் பணம் அனுப்பும் வங்கிக்கணக்கைத் தேர்வுசெய்ய வேண்டும்.
UPI ஐடிக்கு பணம் அனுப்பும் முறை முறை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்