உங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்த விரும்பினால்
1. PhonePe ஆப் முகப்புத் திரையில் உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
2. Bank Accounts/வங்கிக் கணக்குகளை க்ளிக் செய்து UPI பின்னை மீட்டமைக்க அல்லது மாற்ற விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
3. கீழே காட்டப்பட்டுள்ளபடி UPI பின்னுக்கு அடுத்துள்ள மீட்டமை/அமை என்பதைத் தட்டவும்.
4. அந்த வங்கிக் கணக்கிற்கான டெபிட்/ATM கார்டு விவரங்களை உள்ளிடவும்.
5. நீங்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணில் SMS மூலம் பெறும் 6 இலக்க OTP-ஐ உள்ளிடவும்.
குறிப்பு: SMS அனுமதிகளை வழங்கியிருந்தால், PhonePe தானாகவே OTP-ஐ உள்ளிடும். OTP-ஐத் தானாகவே உள்ளிட Phone Settings >> Apps & Notifications >> PhonePe >> Permissions என்பதற்குச் சென்று PhonePe-க்கு அனுமதி வழங்கலாம்.
6. உங்கள் டெபிட்/ATM கார்டின் 4 இலக்க ATM PIN-ஐ உள்ளிடவும்.
7. புதிதாக அமைக்க விரும்பும் 4 அல்லது 6 இலக்க UPI PIN-ஐ உள்ளிடவும்.
8. UPI PIN-ஐ உறுதிசெய்ய அதை மீண்டும் உள்ளிடவும்.
9. Confirm/உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
இதையும் பார்க்கவும்:
ஏன் எனக்கு OTP வரவில்லை?
என்னிடம் டெபிட் அல்லது ATM கார்டு இல்லையென்றால் என்ன செய்வது?
எனது ATM பின்னை நான் மறந்து விட்டால் என்ன செய்வது?