எனது ATM பின் மற்றும் MPIN ஆகியவற்றிலிருந்து எனது UPI பின் எவ்வாறு வேறுபடுகிறது?

ATM பின் என்பது 4 இலக்க குறியீடாகும், இது வழக்கமாக வங்கியால் வழங்கப்படும், இது டெபிட் கார்டு பேமண்ட்கள் மற்றும் ATMகளில் இருந்து பணம் எடுப்பது ஆகியவற்றை அங்கீகரிக்கப் பயன்படுகிறது.

MPIN என்பது IMPS மற்றும் NEFT போன்ற மொபைல் பேங்கிங் பேமண்ட்களை அங்கீகரிக்கவும், தேசிய ஒருங்கிணைந்த USSD தளத்தில் பேமண்ட்டுகளை அங்கீகரிக்கவும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு குறியீடாகும்.

UPI பின் என்பது 4 அல்லது 6 இலக்க கடவுச்சொல் ஆகும், இது நீங்கள் எந்த பேமண்ட் செயலிலும் UPI பேமண்ட்களைச் செலுத்த பயன்படுத்தலாம். PhonePe இல் நீங்கள் சேர்க்கும் எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் நீங்கள் ஒரு தனிப்பட்ட UPI பின்னை அமைக்க வேண்டும்.

முக்கியமானது: தயவுசெய்து உங்கள் UPI பின், ATM பின் மற்றும் MPINஐ யாரிடமும் பகிர வேண்டாம். PhonePe அல்லது வங்கிகள் இந்த PIN களை உங்களிடம் கேட்காது.