UPI எண் என்றால் என்ன?

UPI எண் என்பது ஒரு தனித்துவமான 8, 9 அல்லது 10 இலக்க எண்ணாகும், இது எந்தவொரு பேமண்ட் செயலியிலும் UPI பேமண்ட்டைப் பெறுவதற்கு பேமண்ட் முகவரியாகப் பயன்படுத்தலாம். பேமண்ட் செயலிகளில் பதிவு செய்ய நீங்கள் பயன்படுத்திய மொபைல் எண் உங்களின் 10 இலக்க UPI எண்ணாக இருக்கும்.

PhonePe இல் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண் உங்களின் UPI எண்ணாக இருக்கும், மேலும் இது NPCI-இன் (நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) டேட்டாபேஸில் உள்ள UPI ஐடியுடன் (VPA) இணைக்கப்படும். எந்த பேமண்ட் செயலியிலிருந்தும், இந்த UPI எண்ணைப் பயன்படுத்தி உங்களுக்கு அனுப்பப்படும் எந்தத் தொகையும், டேட்டாபேஸில் உங்கள் எண்ணைச் சேர்க்கும்போது, ​​முதன்மை வங்கிக் கணக்காக அமைக்கப்பட்ட கணக்கில் வரவு வைக்கப்படும்.

NPCI இன் டேட்டாபேஸைப் பற்றி மற்றும் உங்கள் மொபைல் எண் ஏன் டேட்டாபேஸில் சேர்க்கப்பட்டது என்பது பற்றி மேலும் அறியவும்.