NPCI-இன் டேட்டாபேஸில் எனது மொபைல் எண் ஏன் சேர்க்கப்பட்டது?

NPCI-இன் புதிய வழிகாட்டுதல்களின்படி,  நாங்கள் PhonePe இல் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை (UPI எண்) NPCI-இன் டேட்டாபேஸில் சேர்த்து UPI ஐடியுடன் (VPA) இணைக்க வேண்டும். வேறு எந்த பேமண்ட் செயலியிலும் பதிவு செய்திருக்கிறீர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், உங்கள் UPI எண்ணைப் பயன்படுத்தி (PhonePe பதிவு செய்யப்பட்ட எண்) எந்த பேமண்ட் செயலியிலிருந்தும் பேமண்ட்களைப் பெற இது இப்போது உங்களை அனுமதிக்கும்.

எடுத்துக்காட்டாக, யாராவது உங்களுக்கு பேமண்ட் செலுத்த விரும்பினால், ஆனால் அவர்களிடம் PhonePe கணக்கு இல்லை என்றால், வேறு ஏதேனும் பேமண்ட் ஆப் மூலம், உங்கள் UPI எண்ணைப் பயன்படுத்தி அவர்கள் உங்களுக்குப் பேமண்ட் அனுப்பலாம். NPCI-இன் டேட்டாபேஸில் உங்கள் எண் சேர்க்கப்படும்போது, ​​முதன்மை வங்கிக் கணக்காக நீங்கள் இணைத்துள்ள வங்கிக் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.

UPI எண் பற்றி மேலும் அறியவும்