எனது UPI PIN-ஐ மாற்றுவது எப்படி?
PhonePe இல் இணைக்கப்பட்டுள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் உங்கள் UPI பின்னை மாற்ற:
- PhonePe ஆப் முகப்புத் திரையில் உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
- Payment Methods/பேமண்ட் முறைகள் பிரிவின் கீழ் உங்கள் வலதுபுறம் ஸ்க்ரோல் செய்வதன் மூலம், நீங்கள் UPI பின்னை மாற்ற விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். PhonePe உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கைக் காண View all Payment Methods/அனைத்து பேமண்ட் முறைகளையும் காண்க என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் UPI பின்னை மாற்ற விரும்பும் வங்கிக் கணக்கைத் தட்டவும்.
- கீழே காட்டப்பட்டுள்ளபடி, UPI PIN அடுத்துள்ள Change/மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- தற்போதைய UPI PIN-ஐ உள்ளிடவும்.
- புதிய 4 அல்லது 6 இலக்க UPI PIN ஐ உள்ளிடவும்.
- PIN-ஐ உறுதிசெய்ய அதை மீண்டும் உள்ளிடவும்.
- Confirm/உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் UPI பின், ATM பின் மற்றும் MPIN ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்