எனது UPI பின்னை நான் மறந்துவிட்டால் அதை எப்படி மீட்டமைப்பது?
உங்கள் வங்கிக் கணக்கிற்கான UPI PIN நினைவில் இல்லை என்றால், PhonePe செயலியில் அதை மீட்டமைக்கலாம்.
- PhonePe ஆப் முகப்புத் திரையில் உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
- Payment Methods/பேமண்ட் முறைகள் பிரிவின் கீழ் உங்கள் வலதுபுறம் ஸ்க்ரோல் செய்வதன் மூலம், நீங்கள் UPI பின்னை மீட்டமைக்க விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். PhonePe உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கைக் காண View all Payment Methods/அனைத்து பேமண்ட் முறைகளையும் காண்க என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழே காட்டப்பட்டுள்ளபடி, UPI PIN அடுத்துள்ள Reset/மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும்
- அந்த வங்கிக் கணக்கிற்கான டெபிட்/ATM கார்டு விவரங்களை உள்ளிடவும்.
- நீங்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணில் SMS மூலம் பெறும் 6 இலக்க OTP-ஐ உள்ளிடவும்.
- குறிப்பு: SMS அனுமதிகளை வழங்கியிருந்தால், PhonePe தானாகவே OTP-ஐ உள்ளிடும். OTP-ஐத் தானாகவே உள்ளிட Phone Settings >> Apps & Notifications >> PhonePe >> Permissions என்பதற்குச் சென்று PhonePe-க்கு அனுமதி வழங்கலாம்.
- உங்கள் டெபிட்/ATM கார்டின் 4 இலக்க ATM PIN-ஐ உள்ளிடவும்.
- புதிதாக அமைக்க விரும்பும் 4 அல்லது 6 இலக்க UPI PIN-ஐ உள்ளிடவும்.
- UPI PIN-ஐ உறுதிசெய்ய அதை மீண்டும் உள்ளிடவும்.
- Confirm/உறுதிசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
UPI PIN-ஐ மீட்டமைத்தவுடன் விதிக்கப்படும் பரிவர்த்தனை வரம்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்