HDFC வங்கி

கீழ்க்காணும் எந்தவொரு முறையைப் பயன்படுத்தியும் HDFC வங்கியைத் தொடர்புகொள்ளலாம்: 


* வலைதளம்

  1. இந்த இணைப்பைத் தட்டவும் - https://leads.hdfcbank.com/applications/webforms/apply/HDFC_Bank_Escalation/index.aspx.
  2. Service Request/Complaint Reference No. பகுதியிலுள்ள இங்கே கிளிக் செய்க என்பதைத் தட்டவும் 
  3. ஆம் என்பதைத் தேர்வுசெய்யவும்
  4. Net Banking > Unified Payment Interface > Unified Payment Interface. என்பதைத் தேர்வுசெய்யவும்
  5. சமர்ப்பி என்பதைத் தேர்வுசெய்யவும்
  6. இல்லை என்பதைத் தேர்வுசெய்யவும்
  7. (*) எனக் குறியிடப்பட்ட கட்டாயக் களங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டுச் சமர்ப்பிக்கவும். HBL-XXX-XXX-XXX என்கிற வடிவத்திலான வாடிக்கையாளர் புகார் எண்ணைப் பெறுவீர்கள். 

- அகமதாபாத்/ பெங்களூரு/ சென்னை/ தில்லி & NCR / ஹைதராபாத்/ கொல்கத்தா/ மும்பை/ பூனே நகரங்களுக்கு- 61606161
- சண்டிகர் / கொச்சின்/ இந்தூர்/ ஜெய்பூர்/ லக்னோ நகரங்களுக்கு- 6160616
குறிப்பு: அந்தந்த இடங்களுக்கான STD குறியீட்டை முன்னதாக டயல் செய்யவும்.

ஒரு டெபிட் கார்டு பேமண்ட் குறித்து புகார் அளிக்க விரும்பினால் பேமண்ட் விவரங்களுடன் [email protected]  என்கிற முகவரிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பவும்.

ஒரு கிரெடிட் கார்டு பேமண்ட் குறித்து புகார் அளிக்க விரும்பினால் இந்தப்  படிவத்தைப் பூர்த்திசெய்து [email protected] முகவரிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பவும். 

மேல்முறையீடுகளுக்கு:
வாடிக்கையாளர் புகார் உதவி மையத்தின் மூலம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்காவிட்டால், கீழ்க்காணும் இணைப்பின் மூலம் அதை மேல்முறையீடு செய்யலாம்:: https://leads.hdfcbank.com/applications/webforms/apply/grievance_redressal_form.asp

  1. தற்போதுள்ள புகார் குறிப்பு எண்ணை உள்ளிடவும். 
  2. தயாரிப்புகளும் சேவைகளும் பகுதியிலுள்ள டெபிட் கார்டு என்பதைத் தேர்வுசெய்யவும். 
  3. கேள்வி/புகார் வகை பகுதியிலுள்ள ATM/POS பணப் பரிமாற்றச் சிக்கல் என்பதைத் தேர்வுசெய்யவும். 
  4. (*) எனக் குறியிடப்பட்ட கட்டாயக் களங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யவும்.
  5. வங்கி உடனான உறவு பகுதியில் கணக்குதாரர் என்பதைத் தேர்வுசெய்யவும். 
  6. சமர்ப்பி என்பதைத் தேர்வுசெய்யவும்.

ஒரு கிரெடிட் கார்டு பேமண்ட் சிக்கலை மேல்முறையீடு செய்ய விரும்பினால் இந்தப் படிவத்தைப். பூர்த்தி செய்யவும். உங்களுடைய தற்போதைய புகார் குறிப்பு எண்ணை உள்ளிட்டு தொடர்புடைய தயாரிப்புகளும் சேவைகளும் மற்றும் கேள்வி/புகார் வகை ஆகியவற்றைத் தேர்வுசெய்யவும்.