கேஷ்லெஸ் கிளைம் செயல்முறை என்றால் என்ன?

கேஷ்லெஸ் கிளைமுக்கு நீங்கள் காப்பீட்டாளரின் நெட்வொர்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். ஆனால், உங்கள் சிகிச்சையை காப்பீட்டாளர் அல்லது மூன்றாம் தரப்பு நிர்வாகி (TPA) முன்கூட்டியே அங்கீகரிக்க வேண்டும். கேஷ்லெஸ் கிளைம் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே:

  1.  நெட்வொர்க் மருத்துவமனை மற்றும் TPA ஆகியவற்றில் கிடைக்கும் கேஷ்லெஸ் கிளைம் படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து காப்பீட்டாளர் அல்லது TPA ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
  2. உங்களிடமிருந்தோ அல்லது நெட்வொர்க் மருத்துவமனையிலிருந்தோ உங்கள் கேஷ்லெஸ் கிளைம் படிவம் மற்றும் தொடர்புடைய மருத்துவ தகவல்களை சரிபார்த்த பிறகு, காப்பீட்டாளர் அல்லது TPA அந்தந்த நெட்வொர்க் மருத்துவமனைக்கு முன் ஒப்புதல் கடிதத்தை வழங்கும்.
    குறிப்பு: நீங்கள் அல்லது மருத்துவமனையால், தொடர்புடைய மருத்துவ விவரங்களை வழங்க முடியாவிட்டால், காப்பீட்டாளர் அல்லது TPA முன் அங்கீகாரக் கடிதத்தை வழங்காது.
  3. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது, காப்பீடு செய்யப்பட்ட நபர் டிஸ்சார்ஜ் ஆவணங்களை சரிபார்த்து கையொப்பமிட வேண்டும் மற்றும் மருத்துவமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செலவுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

முக்கியம்: கேஷ்லெஸ் கிளைமுக்கு நீங்கள் ஒப்புதல் பெறவில்லை எனில், நீங்கள் மருத்துவமனையிலிருந்து ஆன டிஸ்சார்ஜ் பின்னர் திருப்பிச் செலுத்துவதற்காக(ரீஇம்பூர்ஸ்மென்ட்)  காப்பீட்டு நிறுவனம் அல்லது TPAவிடம் கிளைம் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.