மாதாந்திர SIP என்றால் என்ன?

முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP - Systematic Investment Plans) ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய உங்களை அனுமதிக்கின்றன. இதன் மூலம் தவறாமல் முதலீடு செய்வது உங்களுக்கு பழக்கமாகும். 

மாதாந்திர SIP திட்டத்தின் நன்மைகள் பின்வருமாறு-

சிறிய அளவில் தொடங்குங்கள், பெரிய அளவில் கட்டமையுங்கள் - நீங்கள் முதலீடு செய்ய ஒரு பெரிய தொகை சேரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை, குறைந்தபட்சமாக மாதம் 500 ரூபாயை வைத்தே துவங்க முடியும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு சிறிய தொகையை தவறாமல் முதலீடு செய்வது செல்வத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

முதலீட்டிற்கான ஒழுக்கமான அணுகுமுறை - நீங்கள் முதலீடு செய்ய விரும்பி அதனைப் பெரும்பாலும் மறந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உதவ SIP நினைவூட்டல் அம்சம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் உங்களை முதலீடு செய்ய இந்த அம்சம் நினைவூட்டுகிறது.

சூழலுக்கேற்றபடி முதலீடு செய்யும் தன்மை - நினைவூட்டல் தேதியன்று போதுமான பணம் கையில் இல்லையா? கவலை வேண்டாம்! நினைவூட்டலை ஒத்தி வையுங்கள் (Later/பின்னர் என்பதைத் தட்டுங்கள்), சில நாட்களுக்குப் பிறகு முதலீடு செய்வதற்கு உங்களுக்கு நினைவூட்டப்படும்.

சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து பயனடைதல் - சந்தை வீழ்ச்சியடையும் போது உங்கள் முதலீட்டிற்கு கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் சந்தையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளிலிருந்து பயனடைய SIP உங்களுக்கு உதவுகிறது. இது குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது.