விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

பதிவுபெற்ற பயனர்கள் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை யூனிட்களில் பரிவர்த்தனை செய்யும் அம்சத்தை .PhonePe Wealth Broking பிரைவேட் லிமிடெட் (இனிமேல் “PhonePe Wealth Broking”/”எங்கள்”/”நாங்கள்”/”நம்முடைய” என்று குறிப்பிடப்படும்) வழங்குகிறது.  PhonePe Wealth Broking ARN எண். 187821 என்பதன் கீழ் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளின் அமைப்பு (“AMFI”) உடன் பதிவு செய்யப்பட்டு மியூச்சுவல் ஃபண்டுகளின் விநியோகஸ்தராக நடந்துகொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பதிவுசெய்யப்பட்ட பயனர் மற்றும்/அல்லது ஒரு முதலீட்டாளராக PhonePe Wealth Broking-இல் கிடைக்கும் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது PhonePe Wealth Broking விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் (“விதிமுறைகள்”) உட்பட்டு நிர்வகிக்கப்படுவீர்கள்.       
நீங்கள் தாமாக முன்வந்து உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் தந்து PhonePe Wealth Broking-இல் ஏதாவது ஒரு சேவையை அல்லது சேவைகளைப் பெறக் கோரும்போது, நீங்கள் PhonePe Wealth Broking-இல் பதிவுசெய்யப்பட்ட பயனராகவும் வாடிக்கையாளராகவும் (“பதிவுசெய்யப்பட்ட பயனர்”/”நீங்கள்”/ “உங்களுடைய”) ஆகிறீர்கள், நீங்கள் இந்த விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் படித்து, புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்கிறீர்கள். விதிமுறைகள் அல்லது தனியுரிமைக் கொள்கைக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தொடர வேண்டாம் என்று கோருகிறோம்.  
இந்த ஆவணம் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள்) சட்டங்கள், 2011 மற்றும் அதனுடன் சேர்த்து தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 விதிகளின்படி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் மின்னணுப் பதிவுகள் தொடர்பாகத் திருத்தியமைக்கப்பட்ட பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகளின்படியும் ஒரு மின்னணுப் பதிவாக அமைகிறது. இந்த மின்னணுப் பதிவு கணினியால் உருவாக்கப்படுவதால் டிஜிட்டல் கையொப்பம் தேவையில்லை.  
ஒரு பதிவுசெய்யப்பட்ட பயனராக PhonePe Wealth Broking  விநியோகஸ்தராக இருக்க ஏற்பாடு செய்யப்பட்ட (இனிமேல் “சேவைகள்” என்று மொத்தமாக வழங்கப்படும்) அசெட் நிர்வாக நிறுவனங்களின் (“AMC-கள்”)  திட்டங்களின் மியூச்சுவல் ஃபண்டு யூனிட்களை (“பரிவர்த்தனை/(கள்)”)  நீங்கள் பர்சேஸ், ரிடீம், ஸ்விட்ச் ஆஃப் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது.  "யூனிட்" என்பது முதலீட்டாளரின் ஆர்வத்தைக் குறிக்கும், இது நெட் அசெட்ஸ் திட்டத்தில் உள்ள பிரிக்கப்படாத பங்கை உள்ளடக்கியது. 
 


சேவைகளைத் தொடர்வதன் மூலம், கீழ்கண்டவற்றிற்கு ஒப்புக்கொள்கிறீர்கள்: - 


தகுதி: 

சேவைகளைப் பெறுவதைத் தொடர்வதன் மூலம், ஒப்பந்த சட்டம், 1872-இன் கீழ் உள்ள பொருளின்படி ஒப்பந்தம் செய்வதற்கு தகுதியானவர் என்பதையும் 18 (பதினெட்டு) வயது நிறைவடைந்தவர் என்பதையும் PhonePe Wealth Broking-க்கு தெரிவிக்கிறீர்கள்.  சேவைகளை தற்போது இந்தியக் குடிமக்கள் மற்றும் வரி செலுத்தி இந்தியாவில் வாழ்பவர்கள் மட்டுமே பெறமுடியும். 

பொதுவான விதிமுறைகள் மற்றும் எங்களிடம் உங்கள் சரிபார்ப்புகள்: 

  1.  செக்யூரிடீஸ் அண்டு  எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா ("SEBI") அவ்வப்போது வழங்கும் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ("KYC") வழிகாட்டுதல்களின்படி  உங்கள் தனிப்பட்ட விவரங்களை PhonePe Wealth Broking சரிபார்த்தபின் சேவைகளுக்கான அணுகல் உங்களுக்கு செயல்படுத்தப்படும். 
  2. நீங்கள் முதல் முறை முதலீட்டாளராக இருந்து திட்டங்களை முதல் முறை பர்சேஸ் செய்கிறீர்கள் என்றால், சட்டத்திற்கு உட்பட்டு வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ("KYC") மற்றும் பணமோசடி எதிர்ப்பு செயல்முறையை நிறைவு செய்வதற்காக AMC -க்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும்  PhonePe Wealth Broking-க்கு வழங்க ஒப்புக்கொள்கிறீர்கள். 
  3. உங்கள் அடையாளம் மற்றும் PAN  கார்டு போன்ற வேறு சட்டரீதியாகத் தேவைப்படும் ஆவணங்கள் போன்றவற்றை PhonePe Wealth Broking பயன்படுத்தவும் AMC-கள் / PhonePe துணை நிறுவனங்கள் அல்லது PhonePe தளம் (PhonePe Wealth Broking பிரைவேட் லிமிடெட், PhonePe பிரைவேட் லிமிடெட் அல்லது வேறு ஏதேனும் PhonePe அமைப்புகளுக்குச் சொந்தமான சப்ஸ்கரைப் செய்யப்பட்ட/பயன்படுத்தப்பட்ட ஆன்லைன்/ ஆஃப்லைன் சொத்துக்களைக் குறிக்கிறது. இவை வெப்சைட்டுகள், மொபைல் செயலிகள், சாதனங்கள், URL-கள்/இணைப்புகள், அறிவிப்புகள் அல்லது  PhonePe சேவைகளைப் பயனர்களுக்கு வழங்க  PhonePe அமைப்புகள் பயன்படுத்தும்  ஏதேனும் தொடர்பு ஊடகத்தையும் சேர்த்தே குறிக்கும்) சரிபார்ப்பிற்காக அல்லது PhonePe சேவையைப் பெறவும் (“PhonePe  சேவை”-  PPI, PA, PG, BBPOU, AA, காப்பீடு, MF, தங்க பர்சேஸ், பில் பேமண்ட் &ரீசார்ஜ், இன்-ஆஃப் போன்ற PhonePe அல்லது PhonePe அமைப்புகள் வழங்கக்கூடிய இது போன்ற அனைத்து சேவைகளையும் உள்ளடக்கியது) மற்றும்/அல்லது  திட்டத்தில்/(திட்டங்களில்) உங்கள் முதலீடு தொடர்பான ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு நடக்கவும் பகிர்ந்துகொள்ளவும் அங்கீகரிக்கிறீர்கள்.   டிஜிட்டல் அல்லாத கையெழுத்துடன் ஆஃப்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு பரிவர்த்தனைக்கும் KYC பதிவுகளில் உள்ள கையெழுத்து சரிபார்ப்பிற்காக பயன்படுத்தப்படும் என்பதைப் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.  KYC தகவல்களில் கையெழுத்து/ கையெழுத்திடுபவர் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால் PhonePe Wealth Broking மற்றும் தொடர்புடைய  AMC-களுக்குத் தெரிவிப்பது உங்கள் பொறுப்பாகும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். என்/நம் கையெழுத்து KYC பதிவுகளில் புதுப்பிக்கப்படாமலோ தெளிவாக இல்லாமலோ, கையெழுத்தே இல்லாமலோ  இருந்தால்,   AMC தனது வரம்பிற்கு உட்பட்டு கோரிக்கையின் நம்பகத்தன்மையை சரிபார்க்க சோதனைகளைச் செய்யவும் அல்லது ஏற்கனவே இருக்கும்  KYC  தகவல்களைக் கொண்டு ஆஃப்லைன் கோரிக்கையை நிராகரிக்கவும் உரிமையுயுள்ளது.  
  4. இங்கே வழங்கப்படும் சேவைகள் AMC-களால் நிர்வகிக்கப்படும் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் (“திட்டங்கள்”) மட்டுமே கிடைக்கும் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் AMC-க்களுடன் PhonePe Wealth Broking உடன் சட்டத்திற்கு உட்பட்ட ஏற்பாடுகளுடன் இருக்கிறது என்பதையும் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள். 
  5. நீங்கள் செய்யும் பரிவர்த்தனைகள் PhonePe Wealth Broking-இன் ARN எண். 187821-இன் கீழ் வரும் என்பதையும் நேரடித் திட்டத்தின் கீழ் உள்ள முதலீடாக வராது என்பதையும் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.  
  6. உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (“KYC”) மற்றும் பதிவு நிறுவனம் (“KRA”) தொடர்புடையவற்றுக்கான தேவைகளை SEBI (KYC பதிவு நிறுவனம்) ஒழுங்குமுறை, 2011, SEBI சட்டம், 1992, பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 மற்றும் பல சட்டங்கள், ஒழுங்குமுறைகள், அறிக்கைகள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகள் மட்டுமல்லாது அந்நியச்செலாவணி நிர்வாகச்சட்டம்  மற்றும் RBI வழிகாட்டுதலுக்கு பொருந்துபவற்றுக்கு தேவைப்படும் போது வழங்குவதற்கு உட்பட்டுள்ளீர்கள்.  
  7. முதலீடு செய்யத் தொடர்வதன் மூலம், PhonePe Wealth Broking,, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள AMC-க்கு முதலீடுகளில் திட்டங்கள் தொடர்பான யூனிட்களைப் பற்றிய உங்கள் பரிவர்த்தனைத் தகவல்களின் மொத்த விவரங்களை தொடர்புடைய AMC-க்கு அல்லது பதிவாளருக்கு அல்லது பதிவாளர் மற்றும் டிரான்ஸ்பர் முகவருக்கு (“RTA”) செயல்முறைப்படுதுவதற்காகச் செலுத்த அனுமதிக்கிறீர்கள்.    
  8. KYC முறைப்படுத்துதலுக்காக அவ்வப்போது  தொடர்பு விவரங்கள், வரி செலுத்திய விவரங்கள், அடையாள ஆவணங்கள் போன்றவற்றை சட்டத்திற்கு உட்பட்டு PhonePe Wealth Broking அல்லது AMC-க்கு வழங்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் PhonePe Wealth Broking-க்கு வழங்கிய விவரங்கள், PhonePe Wealth Broking-ஆல் AMC-களுக்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள், ஆடிட்டர்கள், சட்டம் மற்றும் வரி ஆலோசகர்கள் மற்றும் PhonePe Wealth Broking-இன் மூன்றாம் தரப்பினரிடம் உங்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காகப் பகிரப்படலாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். PhonePe Wealth Broking/AMC/AMC-இன் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் நீங்கள் வழங்கிய தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பார்கள் மற்றும் அதற்காக எங்களுடனும் AMC உடனும் இதற்காக ஒத்துழைப்பீர்கள் என்பதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு சரியான நேரத்தில் தகவல்களை வழங்காவிட்டால், சில சேவைகளுக்கோ அல்லது மொத்தமாக சேவைகளைப் பெறுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பதையும் மற்றும்  PhonePe Wealth Broking அல்லது AMC இதற்கு பொறுப்பாகாது என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் வழங்கும் எந்த ஒரு தகவலும் தேவைப்படும் ஒழுங்குமுறை / சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கு பகிரப்படலாம் என்பதையும் PhonePe Wealth Broking-க்கு அந்தத் தகவல்களை வழங்க அங்கீகாரத்தையும் தருகிறீர்கள். 
  9. AMC உடனான பரிவர்த்தனைகளை செயல்படுத்துவது தொடர்புடைய  AMC வழங்கிய ஆஃபர் ஆவணங்களின் திட்டத்தின் விதிமுறைகளுக்கும் திட்டத் தகவல் ஆவணம் (“SID”) மற்றும் அவ்வபோது வழங்கப்படும் மற்றவைகளுக்கும் (“திட்ட ஆவணங்கள்”) உட்பட்டது என்பதைப் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள். பரிவர்த்தனையைத் தொடர்வதற்கு முன் நீங்கள் அனைத்துத் திட்ட ஆவணங்களையும் படித்துவிட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். 
  10. உங்கள் வாடிக்கையாளரைத் அறிந்து கொள்ளுங்கள் (“KYC”) செயல்முறை, முதலீட்டுக்கான தயார்த்தன்மை மற்றும் சட்டத்திற்கும் AMC-க்கும் உட்பட்டு நீங்கள் சப்ஸ்கிரைப் செய்த திட்டத்துக்கு பேமண்ட்டை செலுத்தி, அதை AMC பெற்றவுடன் மட்டுமே உங்கள் பரிவர்த்தனைக்கான கோரிக்கை செயல்படுத்தப்படும்.  யூனிஃபைடு பேமண்ட் இன்டெர்ஃபேஸ் மூலமோ அல்லது வேறு ஏதேனும் பேமண்ட் வழிகள் மூலமாகவோ சந்தாவுக்கு பேமண்ட் செலுத்தும்போது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச பேலன்சை வைத்திருப்பது முழுக்க முழுக்க உங்களின் பொறுப்பாகும் என்பததைப் புரிந்துகொள்கிறீர்கள். வங்கிக்கணக்கில் போதுமான தொகை இல்லாமல் பரிவர்த்தனைக் கோரிக்கை தோல்வி அடைந்தால் PhonePe Wealth Broking அல்லது  AMC  பொறுப்பாகாது. 
  11. ஆஃப்லைனில் சமர்பிக்கப்படும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும், என்  KYC  பதிவுகளில் இருக்கும் கையெழுத்து சரிபார்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். கையெழுத்து/கையெழுத்து இடுபவர்கள் போன்ற  KYC தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் விநியோகஸ்தர்/ AMC-க்கு தெரிவிப்பது முழுக்க முழுக்க உங்களின் பொறுப்பாகும்.  அவ்வாறு கையெழுத்து புதுப்பிக்கப்படவில்லை, திருத்தமாக இல்லை அல்லது கையெழுத்தே இல்லை என்றால், விநியோகஸ்தர்/ AMC மேலும் சரிபார்ப்பு சோதனைகளை மேற்கொண்டு இருக்கும் KYC விவரங்களைக் கொண்டு கோரிக்கையை நிராகரிக்கவும் உரிமை உள்ளது.   AADHAAR மூலமாக உங்கள் KYC சரிபார்க்கப்பட்டிருந்தால், நீங்கள் வேறு ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை AMC/பதிவாளருக்கு சமர்ப்பிக்கமாட்டீர்கள் என்றும் ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிப்பீர்கள் என்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்.  அவ்வாறு செய்யப்படும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் என்பதையும் அதற்கு  AMC/பதிவாளர்/ விநியோகஸ்தர் பொறுப்பாக மாட்டார் என்பதையும் நீங்கள் தெரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள். 

உங்கள் தகவல்கள் சேகரிப்பு மற்றும் பயன்பாடு: 

  1. சேவைகளை வழங்குவதற்காகவும் சட்டரீதியான தேவைக்கும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவும், பயன்படுத்தவும் சேமிக்கவும்  PhonePe Wealth Broking நேரடியாக அல்லது மறைமுகமாக  அதன் துணை நிறுவனங்கள்  செயல்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். PhonePe Wealth Broking,  அதன் துணை நிறுவனங்கள் அல்லது PhonePe அமைப்புகள் ஆகியவற்றின் சேவைகளை நீங்கள் பெற விரும்பும்போது, PhonePe தனியுரிமைக் கொள்கையின்படி உங்கள் தனிப்பட்ட விவரங்களை KYC நிறைவு செய்ய  PhonePe Wealth Broking பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். எனினும், மேலே குறிப்பிடப்பட்டது போல நீங்கள் மற்ற சேவைகளைப் பெற விரும்பினால் மட்டுமே சட்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு உங்கள் விவரங்கள் பயன்படுத்தப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.   
  2. PhonePe Wealth Broking தொடர்பான சேவைகளைப் பற்றிய மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்களுக்காக நீங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் மூலமாக, பதிவுசெய்த மொபைல் நம்பருக்கு SMS அல்லது வாய்ஸ் காலிங் அல்லது அறிவிப்புகள் மூலமாகவோ PhonePe Wealth Broking உங்களைத் தொடர்புகொள்ள அதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதைப் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள். 
  3. PhonePe Wealth Broking உங்களைத் தொடர்புகொண்டு சேவையை வழங்க கீழ்க்கண்ட காரணங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தலாம் (i) உங்கள் சார்பாக AMC-கள் அல்லது RTA-களுடன் தொடர்புகொள்ள; (ii) சரிபார்ப்பிற்காகவும் சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காகவும்  விநியோகஸ்தராக PhonePe Wealth Broking-இன் மற்ற கடமைகளுக்காகவும் AMC-கள் மற்றும் மூன்றாம் தரப்பினரிடம் உங்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது; (iii) தொடர்புடைய மியூச்சுவல் ஃபண்டுகள்/AMC-களுக்கு விற்பனை, பர்சேஸ், ஸ்விட்ச், ரிடெம்ஷன் மற்றும் திட்ட யூனிட்டின் நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனைகள் தொடர்பாக உங்கள் பரிவர்த்தனை டேட்டா மற்றும் இதர கோரிக்கைகளை அனுப்புவது; (iv) மியூச்சுவல் ஃபண்டுகள்/AMC-க்கு செலுத்துவது, உங்கள் நாமிநேஷனைப் பற்றிய தகவல், உங்கள் முதலீட்டில் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் ஒன்றில் நீங்கள் கோரிய  மாற்றம்; மற்றும்/அல்லது (v) KRAவிடம் உள்ள தகவலைப் பெற்றுAMC-க்கு அனுப்புவது.  

பரிவர்த்தனை செயல்முறைப் பற்றிய விதிமுறைகள்: 

  1. பொருந்தும் சட்டத்திற்கும்  KYC தேவைகளுக்கும் நீங்கள் இணங்கும்பட்சத்தில், PhonePe Wealth Broking குறிப்பிட்ட கட்-ஆஃப் நேரத்திற்கு முன்பாக பெறப்பட்டிருந்தால், பரிவர்த்தனை அறிவுறுத்தல்கள் அன்றே செயல்முறைப்படுத்தப்படும். இல்லையெனில், அடுத்த வேலை நாளில் உங்கள் அறிவுறுத்தல்கள் செயல்முறைப்படுத்தப்படும். AMC  குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே PhonePe Wealth Broking கட் ஆஃப் நேரத்தைக் குறிப்பிடலாம். இவ்வாறு  PhonePe Wealth Broking விதிக்கும் தேவைகளுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.உங்களிடம் இருந்து கட் ஆஃப்  நேரத்திற்கு முன்பாக பரிவர்த்தனை அறிவுறுத்தல்கள் பெற்றாலும்  கடவுளின் செயல், கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகள், தொழில்நுட்பத் தடங்கல் போன்றவற்றால் ஏற்படும் தாமததிற்கு  PhonePe Wealth Broking பொறுப்பாகாது.     
  2. உங்கள்  மாத SIP-க்கான தொகை குறிப்பிட்ட முதலீட்டுத் தேதியில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படும், அது வார இறுதி அல்லது வங்கி விடுமுறையாக இருந்தாலும் கூட. ஏதேனும் தொழில்நுட்பக் கோளறுகளால் உங்கள் பேமண்ட் தாமதமானால், அதே மாதத்தில் வேறு ஒரு தேதியில் டெபிட் ஆக முயற்சி மேற்கொள்ளப்படும். கட் ஆஃப் நேரத்தின்படி உங்கள் SIP தொகை மியூச்சுவல் ஃபண்டு திட்டக்கணக்கில் கிரெடிட் ஆன அதே நாளில் NAV யூனிட்களும் வங்கியிடமிருந்து உறுதியானவுடன் ஒதுக்கீடு செய்யப்படும். 
  3. AMC/ RTA-கள் உங்கள் ஃஃபண்டுகளையும் பரிவர்த்தனையையும் பெற்றிருக்கும்பட்சத்தில் தொடர்புடைய மியூச்சுவல் ஃஃபண்டுகளின் திட்ட ஆவணங்களில் வரையறுக்கப்பட்டிருக்கும் நெட் அசெட் வேல்யூவில் (“NAV”) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட  பரிவர்த்தனைகளும் செயல்முறைப்படுத்தப்படும்.AMC அல்லது AMC உடன் தொடர்புடைய மூன்றாம் தரப்பு உங்களுக்கு ஒதுக்கிய யூனிட்களில் ஏதேனும் தவறான NAV-ஆல் இழப்பு ஏற்பட்டால் அதற்கு  PhonePe Wealth Broking பொறுப்பாகாது.  
  4. AMC/ RTA-கள் உங்கள் ஃஃபண்டுகளையும் பரிவர்த்தனையையும் பெற்றிருக்கும்பட்சத்தில் தொடர்புடைய மியூச்சுவல் ஃஃபண்டுகளின் திட்ட ஆவணங்களில் வரையறுக்கப்பட்டிருக்கும் நெட் அசெட் வேல்யூவில் (“NAV”) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட  பரிவர்த்தனைகளும் செயல்முறைப்படுத்தப்படும்.AMC அல்லது AMC உடன் தொடர்புடைய மூன்றாம் தரப்பு உங்களுக்கு ஒதுக்கிய யூனிட்களில் ஏதேனும் தவறான NAV-ஆல் இழப்பு ஏற்பட்டால் அதற்கு  PhonePe Wealth Broking பொறுப்பாகாது.   
  5. விடுமுறை நாளில் வைக்கப்படும் எந்தவொரு பரிவர்த்தனை கோரிக்கையும் SID களில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறை மற்றும் பிற விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். செயலாக்க தேதி மற்றும் உங்கள் முதலீடு செயல்படுத்தப்படும் பொருந்தக்கூடிய NAV பற்றிய விவரங்களுக்கு SID ஐப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
  6. ஒருமுறை செயல்முறைப்படுத்திய பரிவர்த்தனைக் கோரிக்கையை ரத்து செய்ய முடியாது.   
  7. ரிடெம்ஷன், பர்சேஸ், ஸ்விட்ச் அல்லது வேறு ஏதேனும் அறிவுறுத்தலுக்கான விண்ணப்பம் சரியாக, முழுமையாக, தெளிவாக குறிப்பிடப்பட்ட செயல்முறை/ஆவணம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளின்படி இருக்க வேண்டும்.  இல்லையெனில், PhonePe Wealth Broking மற்றும்/அல்லது AMC நிராகரிக்கலாம். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு PhonePe Wealth Broking பொறுப்பாகாது.   
  8. PhonePe Wealth Broking-க்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கும் பரிவர்த்தனை டேட்டாவை  AMC/அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு அனுப்புவதை நிராகரிக்க PhonePe Wealth Broking-க்கு முழு உரிமை உள்ளது. எனினும்,  PhonePe Wealth Broking-க்கு நீங்கள் செய்த அல்லது நீங்கள் செய்ததாகக் கருதப்படும் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் பொறுப்பு இல்லை.  ஒரு பரிவர்த்தனை நீங்கள் செய்ததாகக் கருதியதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம். 
  9. (f)-இல் இருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு PhonePe Wealth Broking இருக்கும், உங்கள் மின்னணு பரிவத்தனை அறிவுறுத்தல்களை AMC-க்கு அனுப்பினால், AMC அதை செயல்முறைப்படுத்தும். எனினும், திட்டத்தில் உங்களின் முதலீடு பற்றிய ஒப்புதல் எடுக்கும் இறுதி முடிவு AMC-இடம் மட்டுமே உள்ளது. வெவ்வேறு முறைப்படுத்துபவர்களின் படி PhonePe Wealth Broking மற்றும்  AMC-கள் பரிவர்த்தனைகளை செயல்படுத்தும்.
  10. ஆட்டோமேட்டட் முதலீட்டுத் திட்டம் அல்லது முறையான முதலீட்டுத் திட்டம் ஆகிய ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருந்தால் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் போதுமான தொகை இருப்பில் இருக்கும்போது இதே முறை செயல்படுத்தப்படும். உங்கள் வங்கியிலிருந்து தானியங்கி மேண்டேட்டுகள் அல்லது டெபிட்டுகளை அமைப்பதற்கு உங்கள் வங்கி தொகையைப் பிடித்தம் செய்யும் என்பதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். இவ்வாறு நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் உங்களுக்கும் உங்கள் வங்கிக்கும் இடையிலானவை. அதற்கு PhonePe Wealth Broking/AMC எவ்வகையிலும் பொறுப்பாகாது.  
  11. முறையற்ற/மோசடி பரிவர்த்தனைகள், முறையற்ற/மோசடி ஃபண்டு டிரான்ஸ்பர் பரிவர்த்தனைகளை நீங்கள் மேற்கொண்டால்,  PhonePe Wealth Broking, AMC, AMC-இன் டிரஸ்டிகள், அதன் அதிகாரிகள், இயக்குநர்கள், ஊழியர்கள் மற்றும் முகவர்கள் உங்களுக்கு இழப்பீடு வழங்குத் தேவையில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாய்மொழியாக அறிவுறுத்தல்களை ஏற்க PhonePe Wealth Broking/AMC-க்கு கடமை இல்லை. PhonePe Wealth Broking, AMC, AMC-இன் டிரஸ்டிகள், அதன் அதிகாரிகள், இயக்குநர்கள், ஊழியர்கள் மற்றும் முகவர்களுக்கு உங்கள் மியூச்சுவல் ஃபண்டு யூனிட்கள் பர்சேஸ், ஸ்விட்ச், ரிடெம்ஷன் செய்யும்போது ஏற்படும் கட்டணம், கிளைம்கள், இழப்புகள், கடன்  (நேரடியான அல்லது மறைமுகமான)-க்கு எந்தவொரு சட்டரீதியான கட்டணத்தில் இருந்து PhonePe Wealth Broking, AMC, AMC-இன் டிரஸ்டிகள், அதன் அதிகாரிகள், இயக்குநர்கள், ஊழியர்கள் மற்றும் முகவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். PhonePe Wealth Broking-இன் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பைத் தெரிந்துகொள்ள மட்டுமே என்றும் அதனால் டிரான்ஸ்மிஷனில் நடைபெறும் தவறுகளை கண்டுபிடிக்க இயலாது என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள்.  
  12. சட்ட ஒழுங்குமுறை அமைப்பு அல்லது இந்திய நாட்டின் நீதிமன்றத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு புறம்பான அல்லது மோசடியான வழியில் செய்த பரிவர்த்தனைகளை திரும்பப் பெறவும் யூனிட்களை விற்கவும் PhonePe Wealth Broking-க்கு உரிமையுள்ளது.  தவறான வழியில் PhonePe Wealth Broking அல்லது PhonePe Wealth அமைப்புகள்  வழங்கும் PhonePe சேவைகளை பயன்படுத்தினால் நீங்கள் வைத்திருக்கும் யூனிட்களை விற்க, திரும்பப்பெற மற்றும் அதனை சட்ட ஒழுங்குமுறை அதிகாரிகள்,  AMC-க்கு தெரிவிக்கவும்  PhonePe-வுக்கு அதிகாரமுள்ளது. 
  13. PhonePe Wealth Broking தற்போது ஒருவர் வைத்திருக்கக் கூடிய முதலீட்டை மட்டுமே செயல்படுத்துகிறது. இணைந்து வைத்திருக்கும் முதலீட்டு கோரிக்கைகளை செயல்படுத்துவதில்லை. நீங்கள் ஒரு திட்டத்தை சப்ஸ்கிரைப் செய்தபின்,  உங்களால் இன்னொருவரை இணைக்கும் கோரிக்கையை PhonePe Wealth Broking ஏற்காது.   
  14.   உங்கள் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் மாற்ற விரும்பினால், கைப்பட எழுதிய கோரிக்கை அல்லது PhonePe Wealth Broking நிர்ணயித்த வேறு முறையில் PhonePe Wealth Broking -க்கு சமர்ப்பித்த பின் அந்த மாற்றங்கள் AMC சிஸ்டத்தில் பிரதிபலிக்கும்.  

உங்கள் உடன்படிக்கைகள் மற்றும் பிரகடனங்கள்:

  1. திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து (அல்லது கூட்டுக் கணக்கிலிருந்து) பெறப்பட்டது என்றும், அவ்வாறு முதலீடு செய்யப்படும் தொகைகள் முறையான மூலங்களிலிருந்து பெறப்பட்டவை என்றும், எந்தவொரு சட்டம், ஒழுங்குமுறை, அரசாங்க உத்தரவு, சுற்றறிக்கை அல்லது கட்டளை ஆகியவற்றை மீறும் நோக்கத்திற்காக வைத்திருக்கவில்லை அல்லது வடிவமைக்கப்படவில்லை என்றும் PhonePe Wealth Broking உடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். முதலீட்டிற்காக பெறப்படும் பணமானது, எந்தவொரு சட்டம், ஒழுங்குமுறை, சுற்றறிக்கை, அறிவிப்புகள் அல்லது வருமான வரிச் சட்டத்தின் உத்தரவுகள், பணமோசடி தடுப்புச் சட்டங்கள், ஊழல் தடுப்புச் சட்டங்கள் அல்லது இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட பிற பொருந்தக்கூடிய சட்டங்களை மீறும் வடிவமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் அறிவிக்கிறீர்கள். 
  2. KYC இணக்கத்திற்காக நீங்கள் PhonePe Wealth Broking-க்கு சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களும் மற்றும் AMC களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அசல் நகல்கள் என்றும் மற்றும் அவை சிதைக்கப்பட்டதோ, போலியானதோ இல்லை என்று நீங்கள் மேலும் உடன்படிக்கை செய்கிறீர்கள். இது சம்பந்தமாக, இதுபோன்ற தவறான நடத்தைகளுக்கு நீங்கள் முழுமையாகப் பொறுப்பாவீர்கள் மற்றும் PhonePe Wealth Broking-கிற்கு எதிராக AMC அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தால் செய்யப்பட்ட உரிமைகோரல் காரணமாக ஏற்படும் அனைத்து இழப்புகளில் இருந்தும் PhonePe Wealth Broking-ஐ விடுவிக்கிறீர்கள்.   
  3. திட்டங்களில் எந்த முதலீடும் செய்ய எங்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீங்கள் எந்த தள்ளுபடி அல்லது பரிசுகளையும் பெறவில்லை அல்லது தூண்டப்படவில்லை என்று PhonePe Wealth Broking உடன் உடன்படிக்கை செய்து உறுதிப்படுத்துகிறீர்கள்.  
  4. திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட நிதிகள் சட்டப்பூர்வமாக உங்களுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள் மற்றும் PhonePe Wealth Broking மற்றும்/அல்லது உங்கள் KYC இணக்கம் தொடர்பாக நீங்கள் செய்த உடன்படிக்கைகள் அல்லது வெளிப்படுத்தல்களை நீங்கள் மீறுகிறீர்கள் என்று தீர்மானிக்கப்பட்டால், நீங்கள் முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்கும் AMC உங்கள் பரிவர்த்தனை கோரிக்கையை நிராகரிக்கும் அல்லது கோரிக்கையை திரும்பப்பெறும் உரிமையை வைத்திருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.   
  5. உங்கள் முதலீடுகளுடன் தொடர்புடைய உங்கள் கிரெடென்ஷியல்களில் ஏதேனும் உண்மையான அல்லது சந்தேகிக்கப்படும் சமரசம் குறித்து PhonePe Wealth Broking-க்கு உடனடியாகத் தெரிவிக்கவும் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்கள். 
  6. மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதையும், திட்டத்தில் உங்கள் முதலீட்டை உறுதிப்படுத்தும் முன், அனைத்து திட்டத் தகவல் ஆவணங்களையும் முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டு, PhonePe Wealth Broking உடன் ஒப்பந்தம் செய்து, பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். 
  7. மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது  AMC-கள் திருப்தி அடையும் வகையில் “உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்” செயல்முறையை நீங்கள் முடிக்கவில்லை என்றால், விண்ணப்பதாரருக்கு ஆதரவாக, திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட நிதியை மீட்டெடுக்க மியூச்சுவல் ஃபண்டுகள்/ AMC-க்கு நீங்கள் இதன் மூலம் அங்கீகாரம் வழங்குகிறீர்கள். அத்தகைய மீட்பின் தேதியில் நிலவும் NAV மற்றும் அத்தகைய சூழ்நிலைகளில் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தேவைப்படும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அங்கீகரிக்கிறீர்கள். 
  8. SEBI/HO/IMD/DF2/CIR/P/2017/39-க்கு இணங்க, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு இ-வாலட்கள் மூலம் சந்தா செலுத்துவதில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விதித்துள்ள பண வரம்பு உங்களுக்குத் தெரியும் என்பதை உறுதிப்படுத்தி ஒப்புக்கொள்கிறீர்கள். ஒரு நிதியாண்டில் ஒரு முதலீட்டாளருக்கு மியூச்சுவல் ஃபண்டிற்கு இ-வாலட்கள் மூலம் மொத்த சந்தா ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) என்று அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  9. நீங்கள் குடியுரிமை பெறாத இந்தியராக இருந்தால், நீங்கள் இந்திய குடியுரிமை / பிறப்பிடத்தை சார்ந்தவர் என்றும், வெளிநாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட வங்கி வழிகள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியுள்ளீர்கள் எனவும் PhonePe Wealth Broking க்கு அறிவிக்கிறீர்கள். சாதாரண/ FCNR கணக்கு. இது சம்பந்தமாக நீங்கள் வழங்கிய அனைத்து விவரங்களும் உண்மை, சரியானவை மற்றும் எப்போதும் புதுப்பிக்கப்படும் என்று PhonePe Wealth Broking க்கு உறுதியளிக்கிறீர்கள்.
  10.  PhonePe  Wealth Broking சேவைகளின் ஆதாய உரிமையாளர் நீங்கள் என்பதையும் மற்றும் FATCA போன்ற வரி தகவல் பகிர்வுச் சட்டங்கள் தொடர்பாக நீங்கள் வழங்கிய தகவல்கள் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குகின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள். வழங்கப்பட்ட தகவலில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாக, அதாவது 30 நாட்களுக்குள் எங்களுக்கு ஆலோசனை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.நீங்கள் தேவையான தகவலை வழங்கவில்லை அல்லது நீங்கள் வழங்கிய தகவலின் நிலையை மாற்றியமைத்திருந்தால் PhonePe Wealth Broking ஆனது விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கு/மேலும் முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கும் உரிமையுள்ளது. உங்கள் வரி இணக்கம் தொடர்பான தகவல்கள் தேவைக்கேற்ப தொடர்புடைய வரி அதிகாரிகளுடன் பகிரப்படலாம். அத்தகைய சட்டங்களுக்கு இணங்குவதற்கு, PhonePe Wealth Broking ஆனது, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்கள்/வரி அதிகாரிகளால் தேவைப்படும் கணக்கிலிருந்து அல்லது அது தொடர்பான எந்தவொரு வருமானத்திலிருந்தும் தகுந்த பிடித்தம் செய்வதை உறுதி செய்வதற்காக எந்தவொரு நிறுவனத்திற்கும் தகவலை வழங்க வேண்டி இருக்கலாம்.
  11. விநியோகஸ்தரின் பணியாளர்/உறவு மேலாளர்/விற்பனை பணியாளர் எந்தவொரு தொடர்பும் அல்லது ஆலோசனையும் இல்லாமல் அல்லது பணியாளர்/விற்பனை பணியாளர்/உறவு மேலாளரால் வழங்கப்பட்ட பொருத்தமற்ற அறிவுரைகள் இருந்தபோதிலும், விநியோகஸ்தர் இந்த பரிவர்த்தனைக்கு எந்த ஆலோசனைக் கட்டணமும் வசூலிக்கவில்லை என்றும் இது ஒரு "செயல்முறைக்கு மட்டும்" பரிவர்த்தனை என்பதை உறுதிசெய்து ஒப்புக்கொள்கிறீர்கள். 


PHONEPE WEALTH BROKING உடன்படிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்:
1. PhonePe Wealth Broking உடன்படிக்கைகள் AMFI பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தராக அது விநியோகஸ்தர்களுக்கான நடத்தை விதிகளை (“நடத்தை நெறிமுறை”) கண்டிப்பாக கடைபிடிக்கிறது மற்றும் இணங்குகிறது மற்றும் நடத்தை நெறிமுறை மற்றும் ஜூன் 30, 2009 தேதியிட்ட, SEBI-இன் SEBI/IMD/CIR/எண் 4/168230/09 சுற்றறிக்கைக்கு இணங்குகிறது என்பதையும் உங்களுக்கும் சேவைகளைப் பெறும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும், அது கூட்டாளியாக இருக்கும் AMC களில் இருந்து கமிஷன்களைப் பெறுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்பதையும் கூறுகிறது. 

குறிப்பிடப்பட்டுள்ள விகிதங்கள் GSTஐ உள்ளடக்கியது அல்ல. AMC ப்ரோக்கரேஜ் விகிதங்களைப் பற்றி அறிய இங்கே தட்டவும்.

2. விநியோகஸ்தரின் பணியாளர்/உறவு மேலாளர்/விற்பனை பணியாளர் எந்தவொரு தொடர்பும் அல்லது ஆலோசனையும் இல்லாமல் அல்லது பணியாளர்/விற்பனை பணியாளர்/உறவு மேலாளரால் வழங்கப்பட்ட பொருத்தமற்ற அறிவுரைகள் இருந்தபோதிலும், விநியோகஸ்தர் இந்த பரிவர்த்தனைக்கு எந்த ஆலோசனைக் கட்டணமும் வசூலிக்கவில்லை என்றும் இது ஒரு "செயல்முறைக்கு மட்டும்" பரிவர்த்தனை என்பதை உறுதிசெய்து ஒப்புக்கொள்கிறீர்கள். 

3. ஆன்லைனில் வழங்கப்படும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் PhonePe Wealth Broking-ஆல் பரிந்துரைக்கப்படவில்லை என்பது இங்கே வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. உங்களின் ரிஸ்க் சுயவிவரத்தின் அடிப்படையில் உங்களுக்குப் பொருத்தமான தயாரிப்புகளை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள், மேலும் இது சம்பந்தமாக உங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு PhonePe Wealth Broking பொறுப்பேற்காது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இது ஒரு செயல்பாட்டிற்கு மட்டுமேயான பரிவர்த்தனை என்பதால், AMFI ஆல் விற்பனை ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர் தனிப்பட்ட அடையாள எண் (EUIN) பொருந்தாது என்பதை நீங்கள் உறுதிசெய்கிறீர்கள். 

4. PhonePe Wealth Broking, ஒரு குறிப்பிட்ட வகை முதலீட்டாளருக்கு அல்லது உங்களுக்குத் தனித்தனியாக ஒரு திட்டத்தின் ரிஸ்க் அல்லது பொருத்தமற்ற தன்மையைப் பற்றி எங்கள் ஊழியர்கள் உங்களுக்குத் தகவல் அல்லது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் சூழ்நிலைகளில் கூட PhonePe Wealth Broking எந்தவொரு பரிவர்த்தனைக்கும் எந்த ஆலோசனைக் கட்டணத்தையும் வசூலிக்காது என்று அறிவிக்கிறது. PhonePe Wealth Broking திட்டத்தில் முதலீடு செய்வதற்காக உங்களிடமிருந்து பெறப்பட்ட பணப்பரிவர்த்தனை கட்டணங்களில் இருந்து எந்த பரிவர்த்தனை கட்டணத்தையும் கழிப்பதில்லை.  

5. PhonePe Wealth Broking Private Limited அல்லது PhonePe நிறுவனங்களில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள், பொதுவில் கிடைக்கும் தகவல்கள், உள் ஆதாரங்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பு ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை, நம்பகமானவை என்று நம்பப்படுகிறதே தவிர, எந்தத் திட்டத்தைப் பற்றிய எங்கள் விளக்கம் அல்ல. காட்டப்படும் கணக்கீடுகள் விளக்க நோக்கத்திற்காக மட்டுமே & எந்த வகையிலும் முதலீட்டின் தரத்தையும் திட்டம்/திட்டத்தின் எதிர்கால செயல்திறனைக் குறிக்கவும் இல்லை & இதை முதலீட்டு முடிவுக்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்படக்கூடாது. மியூச்சுவல் ஃபண்டு திட்டம் என்பது டெபாசிட் தயாரிப்பு அல்ல மற்றும் அடிப்படை முதலீடுகள் காரணமாக, மியூச்சுவல் ஃபண்டின் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும்.

வரம்புகள் மற்றும் பொறுப்புத்துறப்புகள்: 

  1. பேமண்ட் செலுத்திய பின்னும் பர்சேஸ் செய்யப்பட்ட யூனிட்களை வழங்குவதில் AMC-ஆல் ஏற்படும் தோல்வி அல்லது தாமதத்திற்கும் அல்லது விற்கப்பட்ட யூனிட்கள் டெலிவரி செய்த பின்னும் பணம் செலுத்துவதில் தோல்வி அல்லது தாமதம் ஏற்பட்டால்  PhonePe Wealth Broking பொறுப்பேற்காது. அது தொடர்பான எந்தவொரு உரிமைகோரலில் இருந்தும் பாதிப்பில் இருந்தும் PhonePe Wealth Broking- ஐ நீங்கள் விடுவிக்கிறீர்கள். உங்கள் பெயர்களுக்கு யூனிட்களை பதிவு செய்வதில் அல்லது மாற்றுவதில் மியூச்சுவல் ஃபண்டு / AMC-இன் தாமதம், தோல்வி அல்லது மறுப்பு அல்லது அதனால் ஏற்படும் வட்டி, டிவிடென்ட் அல்லது பிற இழப்புகளுக்கு PhonePe Wealth Broking பொறுப்பாகாது. 
  2. PhonePe  Wealth Broking அதன் பங்கில் உள்ள கடும் அலட்சியத்தைத் தவிர, AMC-இன் எந்தவொரு செயலுக்கும், புறக்கணிப்புக்கும் அல்லது தாமதத்திற்கும் அல்லது PhonePe Wealth Broking அல்லது அவர்களின் ஊழியர்கள் மூலம் நீங்கள் பாதிக்கப்படக்கூடிய அல்லது ஏற்படும் எந்தவொரு உரிமைகோரல்களுக்கும்  உங்களுக்குப் பொறுப்பாகாது.
  3. PhonePe Wealth Broking-இன் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எந்தவொரு நிகழ்வு அல்லது சூழ்நிலைகளாலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படும் இந்த விதிமுறைகளின் கீழ் அதன் கடமைகளுக்கு இணங்குவதில் அல்லது தாமதப்படுத்துவதில் ஏதேனும் இழப்பு அல்லது சேதம் அல்லது தோல்விக்கு PhonePe Wealth Broking பொறுப்பேற்காது. இவற்றில் சிஸ்டம் தோல்வி, நெட்வொர்க் பிழைகள், மேற்கூறியவை மற்றும் கடவுளின் செயல்கள், வெள்ளம், தொற்றுநோய்கள், தனிமைப்படுத்தல், கலவரம், உள்நாட்டு கலவரம் மற்றும்/அல்லது போர் ஆகியவற்றின் காரணமாக டேட்டா தாமதம் அல்லது இழப்பு ஆகியவை அடங்கும். உங்கள் தகவல் மற்றும்/அல்லது கையொப்பங்களின் மோசடி அல்லது அங்கீகரிக்கப்படாத பயன்பாடு அல்லது அணுகல் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகள், சேதங்கள், செலவுகள்,  பொறுப்புகள் மற்றும் உரிமைகோரல்களுக்கு PhonePe Wealth Broking பொறுப்பேற்காது என்பதை மேலும் ஒப்புக்கொள்கிறீர்கள். PhonePe Wealth Broking உங்கள் முதலீட்டு அதிகாரங்களில் ஏதேனும் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதைச் சரிபார்க்க எந்தக் கடமையும் இருக்காது. கணினி, கேபிள், டெலக்ஸ், தொலைபேசி அல்லது அஞ்சல் அமைப்பு தொடர்பான ஏதேனும் குறைபாடுகள் அல்லது இயந்திர அல்லது பிற செயலிழப்பு காரணமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படும் இழப்பு, சேதம், செலவு, கட்டணங்கள் அல்லது செலவுகளுக்கு PhonePe Wealth Broking பொறுப்பாகாது.
  4. PhonePe Wealth Broking அதன் சிஸ்டம்களை எல்லா நேரங்களிலும் கிடைக்கச் செய்ய எல்லா முயற்சிகளையும் எடுக்கும் அதே வேளையில், PhonePe Wealth Broking அத்தகைய சிஸ்டம்களின் கிடைக்கும் தன்மை குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்காது. PhonePe Wealth Broking ஆனது நெட்வொர்க் பிரச்சனைகள், வைரஸ் தாக்குதல்கள் போன்ற கிடைக்கும் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இவை இருந்தபோதிலும், PhonePe Wealth Broking நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிஸ்டம் கிடைக்காத/டவுன்டைம் காரணங்களால் ஏற்படும் எந்த இழப்பு, சேதம், செலவு, கட்டணங்கள் அல்லது செலவினங்களுக்கு பொறுப்பாகாது.
  5. PhonePe Wealth Broking வழங்கும் சேவைகள் மற்றும் சேவைகளின் ஒரு பகுதியாக இருக்கும் உள்ளடக்கங்கள், அல்லது பிற துணை உள்ளடக்க வழங்குநர்கள், ஏதேனும் முதலீடு அல்லது பாதுகாப்பைப் பெறுவதற்கு அல்லது அகற்றுவதற்கு அல்லது எந்த முதலீட்டு பரிவர்த்தனையிலும் ஈடுபடுவதற்கு எந்தவொரு வரி, சட்ட, காப்பீடு அல்லது முதலீட்டு ஆலோசனையையும் வழங்குவதாகக் கருதப்படாது, மேலும் PhonePe Wealth Broking அல்லது AMC பரிந்துரையாக எதையும் கருதக்கூடாது.PhonePe Wealth Broking வழங்கும் சேவைகள் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளின் திட்டங்களைப் பட்டியலிடுகிறது மற்றும் பயனர்கள் அத்தகைய திட்டங்களில் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது. செயல்படுத்தும் சேவையை வழங்குவதற்கு எங்களால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டதைத் தவிர, உங்கள் முதலீட்டு நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட மற்றும் நிதி நிலைமையின் அடிப்படையில் ஏதேனும் முதலீடு, பாதுகாப்பு அல்லது வேறு ஏதேனும் தயாரிப்பு அல்லது சேவை உங்களுக்குப் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு உங்களுக்கு மட்டுமே உள்ளது. ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதில் உள்ள அபாயங்களைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அறிவும் அனுபவமும் உங்களுக்கு இருப்பதாகவும், முதலீடு தொடர்பான ஆபத்தைத் தாங்கும் திறன் உங்களுக்கு இருப்பதாகவும் PhonePe Wealth Broking-க்கு உறுதியளிக்கிறீர்கள். உங்களின் குறிப்பிட்ட சட்ட அல்லது வரி வினவல்கள் தொடர்பாக சட்ட அல்லது வரி நிபுணரிடம் ஆலோசனை கேட்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். சேவைகளின் அணுகல் மற்றும் பயன்பாடு முற்றிலும் உங்கள் சொந்த ரிஸ்கில் உள்ளது. சேவைகள், அதன் ஒரு பகுதியாக கிடைக்கப்பெறும் உள்ளடக்கம் அல்லது தகவல், அல்லது தொடர்புடைய அல்லது இணைக்கப்பட்ட தளம், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் காட்டப்படும், வழங்கப்பட்ட, பெறப்பட்ட, உரிமம் பெற்ற அல்லது வாங்கப்பட்ட, சேவைகள் மூலமாகவோ அல்லது சேவைகள் மூலமாகவோ எந்தவொரு பிரதிநிதித்துவம் அல்லது உத்தரவாதம்/உத்தரவாதம், வெளிப்படையான அல்லது மறைமுகமாக, வரம்புகள் இல்லாமல், துல்லியம், தொடர்ச்சி, தடையற்ற அணுகல், நேரமின்மை, வரிசை, தரம், செயல்திறன், எந்தவொரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் அல்லது முழுமைக்காகவும் எந்தவொரு பிரதிநிதித்துவம் அல்லது உத்தரவாதமும் இல்லாமல் "உள்ளபடியே" வழங்கப்படுகின்றன. 

ஃபண்டு ரேட்டிங்கள்
காட்டப்படும் நிதி மதிப்பீடுகள் ஒரு சுயாதீன நிறுவனமான வேல்யூ ரிசர்ச் மூலம் வழங்கப்படுகின்றன. விரிவான வேல்யூ ரிசர்ச் தரவரிசை முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 
https://www.valueresearchonline.com/fund-rating-methodology/


திட்டம் தொடர்பான அபாயங்கள்
மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பத்திரங்களில் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை மற்றும் திட்டங்களின் NAV ஆனது வட்டி விகிதங்களில் உள்ள மற்ற மாற்று ஏற்ற இறக்கங்கள் உட்பட பத்திர சந்தையை பாதிக்கும் காரணிகள் மற்றும் சக்திகளைப் பொறுத்து ஏற்ற இறக்கமாக இருக்கலாம். ஒரு திட்டத்தின் முதலீட்டு நோக்கங்கள் அடையப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருக்க முடியாது. அனைத்து டிவிடென்ட் விநியோகங்களும் திட்டங்களின் முதலீட்டு செயல்திறனுக்கு உட்பட்டது. AMC-களால் செய்யப்படும் முதலீடுகள் வெளிப்புற அபாயங்களுக்கு உட்பட்டவை. PhonePe Wealth Broking மாறிவரும் ஆபத்து காரணிகள் பற்றிய அனைத்து விழிப்புணர்வையும் மறுக்கிறது மற்றும் நீங்கள் (பயனர்) திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் அதன் செயல்திறன் சாதனைப் பதிவைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை: 

  1. PhonePe Wealth Broking ஆனது AMC-களுடன் பரிவர்த்தனை செய்ய உங்களுக்கு உதவும் பயனர் நட்பு தொழில்நுட்ப அடிப்படையிலான இடைமுகத்தை வழங்குகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் எந்த வகையிலும் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது, மேலும் ஏதேனும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது சந்தேகத்திற்குரிய துஷ்பிரயோகம் ஆகியவற்றால் உங்கள் சேவைகளுக்கான அணுகலை உடனடியாக இடைநிறுத்தவோ அல்லது நிறுத்தவோ PhonePe Wealth Broking-க்கு உரிமை உண்டு.  
  2. இன்டர்ஃபேஸ் மற்றும் சேவைப் பயன்பாட்டில் நாங்கள் வழங்கக்கூடிய வழிமுறைகளைத் தவிர வேறு முறைகளைப் பயன்படுத்தி சேவைகளை சீர்குலைக்க அல்லது அணுக முயற்சிக்க உங்களுக்கு அங்கீகாரம் இல்லை. PhonePe Wealth Broking உங்களை சந்தேகித்தால் அல்லது நீங்கள் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்கிறீர்கள் அல்லது எங்கள் சேவைகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறீர்கள் என்று சந்தேகித்தால், PhonePe Wealth Broking சேவைகளை வழங்குவதை நிறுத்திவிட்டு உங்களுக்கு அல்லது உங்கள் சார்பாக சேவைகளைப் பயன்படுத்தும் பிற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.
  3. PhonePe Wealth Broking மற்றும்/அல்லது AMC-கள் சேவைகள் மற்றும் சேவைகளின் ஒரு பகுதியாக உங்களுக்கு வழங்கப்படக்கூடிய குறிப்புகள், அறிக்கைகள், டேட்டா, வரைபடங்கள், வடிவமைப்புகள், வரைபடங்கள், அட்டவணைகள் மற்றும் பிற புள்ளிவிவரத் தகவல்களின் மீதான அனைத்து உரிமைகளையும் வைத்திருக்கும். PhonePe Wealth Broking ஆனது அனைத்து மூலக் குறியீடுகள், பொருள் குறியீடு அல்லது பிற தகவல் அல்லது பொருட்கள், PhonePe Wealth Broking மூலம் எவ்வாறு சேமிக்கப்பட்டாலும், வாங்கியிருந்தாலும், உருவாக்கினாலும், வடிவமைத்தாலும் அல்லது எந்த வகையிலும் தயாரிக்கப்பட்டாலும், பிரத்தியேக உரிமைகளைக் கொண்டுள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.  
  4. PhonePe Wealth Broking தொடர்பான அனைத்து வர்த்தக முத்திரைகள், லோகோக்கள் மற்றும் பிராண்டிங் ஆகியவை PhonePe Wealth Broking-இன் ஒரே மற்றும் பிரத்யேக சொத்தாக இருக்கும். PhonePe Wealth Broking-இன் முன் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற்றிருந்தால் மற்றும் அத்தகைய எழுத்துப்பூர்வ ஒப்புதலில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பிராண்டிங் வழிகாட்டுதல்களையும் பின்பற்றும் வரை, அத்தகைய அறிவுசார் சொத்தின் எந்தவொரு பகுதியையும் அல்லது முழுவதையும் எந்த வகையிலும் பயன்படுத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை.    
  5. PhonePe Wealth Broking-இன் பிராண்டிங், லோகோக்கள், வடிவமைப்பு மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தனித்துவமான பயனர் இடைமுகம் மற்றும் அல்காரிதம்கள் உட்பட PhonePe Wealth Broking-இன் எந்தவொரு அறிவுசார் சொத்துக்கும் சேவைகளைப் பயன்படுத்துவதால் உங்களுக்கு எந்த உரிமையையும் வழங்காது. சேவைகளின் அனைத்துப் பகுதிகளும், அல்காரிதம்களும், சேவைகளின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட பிற உள்ளடக்கங்களும் எப்போதும் PhonePe Wealth Broking மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பிரத்யேக அறிவுசார் சொத்தாக இருக்கும். PhonePe Wealth Broking-க்கு நீங்கள் வழங்கும் உங்கள் தொடர்புத் தகவல் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் மீதான உரிமைகளை மட்டுமே நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் உங்கள் தனிப்பட்ட தகவலை உங்களுடன் தொடர்பு கொள்ளவும், பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்குவது உட்பட உங்களுக்கு சேவைகளை திறம்பட வழங்கவும் எங்களுக்கு உரிமை வழங்க வேண்டும். 

நிறுத்தம்
எங்களின் மூலம் நீங்கள் செய்த முதலீடுகளை AMC-க்கு எழுதுவதன் மூலம் வேறு எந்த விநியோகஸ்தருக்கும் மாற்றலாம். AMC பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் முதலீடுகளை மாற்றலாம். PhonePe Wealth Broking உங்களுக்கு அத்தகைய முடிவு நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் ஏற்பட்ட அத்தகைய முடிவின் போதிலும் நீங்கள் இங்குள்ள கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட மாட்டீர்கள் எனும் பட்சத்தில் எழுத்துப்பூர்வமாக 30 (முப்பது) நாட்களுக்கு முன் அறிவிப்பு கொடுத்து சேவைகளை நிறுத்தலாம்.

விதிமுறைகளில் திருத்தம்
முன்னறிவிப்பின்றி விதிமுறைகளும் நிபந்தனைகளும் எந்த நேரத்திலும்  PhonePe Wealth Broking-ஆல் மாற்றியமைக்கப்படலாம். எனினும் நீங்கள் தொடர்ந்து சேவைகளைப் பயன்படுத்தும்போது, திருத்தப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஒப்புக்கொண்டதாகவே கருதப்படும்.  இந்த விதிமுறைகளில் ஏற்படும் திருத்தங்களை நீங்களே அப்டேட் செய்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பதிவு செய்த மின்னஞ்சல் மூலமாக அப்டேட்களைத் தெரிவிக்க PhonePe Wealth Broking முயற்சி மேற்கொள்ளும்.

குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் ஆதரவு:
சேவைகளுக்குள் பெரும்பாலான கேள்விகளையும் கோரிக்கைகளையும் தீர்க்கும் ஒரு இன்-ஆப் ஆதரவு சேனல் உள்ளது. உங்கள் பிரச்சனை இதன்பிறகும் தீர்க்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், உதவி பிரிவில் உங்கள் பிரச்னையை ஒரு புகாராகப் பதிவு செய்து எங்களிடம் முறையிடலாம். உங்கள் ப்ரோஃபைல் பக்கத்தின் வழியாக உதவி பிரிவை நீங்கள் அணுகலாம்.   

PhonePe Wealth Broking ஒரு புகாரைப்பெற்று, பதிவு எண் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன்  24 (இருபத்திநான்கு) மணி நேரத்திற்குள்  முதல் பதிலும் 3 (மூன்று) வேலை நாட்களுக்குள் உங்கள் புகாரைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனினும்,  AMC அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் காரணங்களால் உங்கள் புகாரைத் தீர்ப்பதில் தாமதமாகலாம்.  அவ்வாறு இருந்தால், தீர்வு கிடைக்கும் மற்றொரு நாளைத் தெரியப்படுத்த முயற்சி மேற்கொள்ளுவோம். சந்தா செலுத்திய திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட NAV, மீட்பு அல்லது கோரிக்கைகளை மாற்றுவதில் தாமதம் போன்ற உங்கள் முதலீட்டைப் பற்றிய உங்கள் கேள்விகள் நேரடியாக தொடர்புடையதாக இருந்தால், PhonePe Wealth Broking ஆனது AMC இலிருந்து பெறப்படும் கருத்தைப் பொறுத்தது என்பதால், தீர்வுக்கு அதிக நேரம் ஆகலாம்.

நிர்வாகச் சட்டம்
PhonePe Wealth Broking  வழங்கும் சேவைகள் தொடர்பான விதிமுறைகள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு நிர்வகிக்கப்படும். மேலும் சேவைகள் தொடர்பானவை பெங்களூரு, கர்நாடகாவில் உள்ள நீதிமன்றத்தின் முழு அதிகார வரம்பிற்கு உட்பட்டு இருக்கும். எனினும், அனைத்து திட்டம் மற்றும் முதலீடு சார்ந்த சிக்கல்கள் முழுமையாக இந்த விதிமுறைகளில் இருக்காது என்றாலும் திட்ட ஆவணங்களின் படி நிர்வகிக்கப்படும்.