வரிசேமிப்பு ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் பலன் என்ன?
வரியை சேமிக்க இதுவரை முதலீடு செய்யாமல் இருந்தால் வரிசேமிப்பு ஃபண்டுகளில் தொடங்கும்படி பரிந்துரைக்கிறோம். அதற்கான காரணங்கள் இதோ.
- ₹46,800 வரை சேமிக்கலாம்: உங்கள் வரி வரம்பைப் பொறுத்து, ஒரு நிதி ஆண்டுக்கு ₹ 46,800 வரை வரி சேமிக்க முடியும்.
- சேமிப்பைப் பெருக்கலாம்: வரிசேமிப்பு ஃபண்டுகளில் முதலீடுசெய்யும்போது வங்கி FD, NSC,PPF போன்ற பிற வரிசேமிப்புத் தேர்வுகளைவிட நீண்டகாலத்தில் அதிக லாபத்தை ஈட்டலாம்.
- மிகக்குறைந்த லாக்-இன் காலம்:
வரிசேமிப்பு ஃபண்டுகள் இருப்பதிலேயே குறைந்தபட்ச லாக்-இன் காலம் 3 ஆண்டுகள்:
வங்கி FD - 5 ஆண்டுகள்
NSC - 5 முதல் 10 ஆண்டுகள்
PPF - 15 ஆண்டுகள்
குறிப்பு: முதலீடு செய்த யூனிட்டுகளை விற்கமுடியாத காலகட்டம் லாக்-இன் காலம் என்று அழைக்கப்படுகின்றது. - தொழில்முறையாக நிர்வகிக்கப்படும் ஃபண்டுகள் - ஃபண்டு நிர்வாகிகள் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான நிறுவனங்களை கவனமாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக முதலீடுகளைக் கண்காணிக்கிறார்கள்.
- பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டு போர்ட்ஃபோலியோ - ஒரு நிறுவனம் அல்லது துறை சிறப்பாக செயல்படவில்லை என்றால், நிதி முதலீட்டாளர்கள் உங்கள் முதலீட்டை பல்வகைப்படுத்தவும் ஆபத்தை குறைக்கவும் வணிகத் துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள்.
எடுத்துக்காட்டுக்கு வெறும் ₹1,000 முதலீட்டில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் உள்ள 40 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியும். பங்குசந்தையில் ஒரு நிறுவனம் சரியாகச் செயல்படாவிட்டாலும், அதிக இழப்பு ஏற்படும் உயர் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
வரிசேமிப்பு ஃபண்டுகள் குறித்து அறிக