வரிசேமிப்பு ஃபண்டுகள் என்றால் என்ன?
வரிசேமிப்பு ஃபண்டுகள் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை வருமான வரிச்சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள வரி விலக்குகளை அனுபவிக்க அனுமதிக்கின்ற ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.
வங்கி நிரந்தர வைப்புநிதி (FD) (5 ஆண்டுகள்), தேசிய சேமிப்பு சான்றிதழ்கள்(NSC)(5-10 ஆண்டுகள்), பொது வருங்கால வைப்புநிதி (PPF) (15 ஆண்டுகள்) போன்ற பிற வரிசேமிப்புத் தேர்வுகளோடு ஒப்பிடும்போது இவை மிகக்குறைந்த லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளன, அதாவது 3 ஆண்டுகள் மட்டுமே.
வரிசேமிப்பு ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் பலன்கள் குறித்து அறிக