வரிசேமிப்பு ஃபண்டுகளில் முதலீடுசெய்தால் 80C பிரிவின் கீழ் கோரக்கூடிய வரி விலக்குகள் என்னென்ன?

வரிசெலுத்தக்கூடிய வருவாயில் இருந்து அதிகபட்சமாக ₹1,50,000 வரிவிலக்கு அளிக்கப்பட 80C பிரிவு அனுமதிக்கிறது. இருப்பினும், மொத்த வரிசேமிப்பு உங்கள் வரி ஸ்லாபை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் வரி ஸ்லாபின் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு சேமிக்கலாம் என்பதை அறிந்துகொள்ள கீழ்க்காணும் அட்டவணையைப் பார்க்கவும்:

  உதாரணம்1 உதாரணம் 2
வருமானம் ₹12,00,000 ₹8,50,000
வரி ஸ்லாப்  30% 20%
கோரப்பட்ட 80C வரிவிலக்கு  ₹1,50,000 ₹1,50,000
ஸ்லாபுக்கான வரி   ₹45,000 (1,50,000 x 30% வரி விகிதம்) ₹30,000(1,50,000 x 20% வரி விகிதம்)
வருமான வரிமீதான கூடுதல் வரி (4%) ₹1,800 (45,000 x 4% கூடுதல் வரி) ₹1,200 (30,000 x 4% கூடுதல் வரி)
சேமிக்கப்பட்ட மொத்த வரி    ₹46,800 ₹31,200

குறிப்பு: 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு அரசாங்கம் 4% கூடுதல் வரி விதித்துள்ளது

வரிசேமிப்பு ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் பலன்கள் குறித்து அறிக